Thursday 21 December 2017

மனிதர்களின் வேலைகளை பறித்து கொள்ளும் ரோபோக்கள்


வேலையை மிக சிறப்பாக செய்து முடிக்கிறது, அதிக வேலை என்று அலுத்து கொள்ளாது, ஒரு முறை விலை கொடுத்து வாங்கி விட்டால், அவ்வப்போது செய்யும் பராமரிப்பு செலவு மட்டுமே, மற்றபடி செய்யும் வேலைக்கு சம்பளமோ, போனசோ, சாப்பாடோ, தங்குமிடமோ கேட்காது, சில மணி நேரம் மின்சார பேட்டரியை சார்ஜ் செய்தால் போதும் மணிக்கணக்கில் தொடர்ந்து வேலை பார்க்கும். இப்படி ரோபோக்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதால் வரும் நன்மைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம், மனிதனின் கண்டுபிடிப்பான ரோபோ மனிதன் செய்யக்கூடிய சில கடினமான, ஆபத்தான வேலைகளை (சுரங்கம் தோண்டுவது, ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் அமைப்பது...)  செய்வதற்கு பயன்படுவதும் நல்லதே, ஆனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் மிக பெரிய தொழிற்சாலைகளில் அவர்கள் செய்யும் வேலைகளை சில ரோபோக்கள் குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் இப்போது எண்ணற்ற தொழிலாளர்களின் பணியிடங்களை, வேலைவாய்ப்பை இந்த ரோபோக்கள் பறித்து கொள்ள துவங்கியுள்ளன. 

சீனாவின் மிகபெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் குடோனில் எந்திரங்கள் வேலை செய்யும் காணொளி காட்சி 


சீனாவில் இயங்கி வரும் மிக பெரிய கார் தொழிற்சாலைகள், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் குடோன்கள் போன்றவை எந்திரமயமாக்கபட்டதை தொடர்ந்து  அங்கு பல்லாயிரம் மனிதர்களை பணிக்கு அமர்த்திய தொழிற்சாலைகள் இன்று சில நூறு தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்யும் இடமாக மாறிவிட்டது. விஞ்ஞான முன்னேற்றம் நல்லது தான் ஆனால் மனிதர்களின் எதிர்கால வாழ்வை சூனியமாக்கி  இருளில் தள்ளும் இந்த வகையான முன்னேற்றம் நல்லது தானா?....

கார் தொழிற்சாலை ஒன்றில் காரை அசெம்பிள் செய்யும் எந்திரங்கள் 

--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்