Wednesday 28 February 2018

கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 - திருச்சி - காணொளி காட்சி தொகுப்பு பாகம் - 2



திருச்சி மாநகரில் நடைபெற்று கொண்டிருக்கும் கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 - சிறப்பு காணொளி காட்சி தொகுப்பின் பாகம் - 2 உங்களுக்காக...   

இந்த கண்காட்சி வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது, கலைநயமிக்க சிலைகள், ஓவியங்கள், உடைகள், நகைகள், அலங்கார பொருட்கள் உங்கள் பார்வைக்கு: 


Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 9




 Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 10



Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 11


 Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 12


Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 13 

 

கைவினை பொருட்கள் கண்காட்சி, திருச்சி - 2018 - சிறப்பு காணொளி காட்சி தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து காணொளி காட்சிகளையும் காண விரும்பினால் இங்கு க்ளிக் செய்யுங்கள்
-----------------------------------------------
முந்தைய பதிவுகள்

-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 27 February 2018

கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 காணொளி காட்சி தொகுப்பு பாகம் -1

திருச்சி மாநகரில் நடைபெற்று கொண்டிருக்கும் கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 - சிறப்பு காணொளி காட்சி தொகுப்பு உங்களுக்காக...   இந்த கண்காட்சி வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது, கலைநயமிக்க சிலைகள், ஓவியங்கள், உடைகள், நகைகள், அலங்கார பொருட்கள் உங்கள் பார்வைக்கு: 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 1 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 2 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 3 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 4 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 5 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 6 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 7 

 

Crafts Mela - கைவினை பொருட்கள் கண்காட்சி - 2018 பகுதி - 8 


முந்தைய பதிவுகள்
-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 16 February 2018

வாடிக்கையாளரை அசத்தும் தானியங்கி ஷாப்பிங் கார்ட் டிராலி


சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி பட்டி பறக்கும்  ஜே.டி நிறுவனம் பெய்ஜிங் நகரில் 7 ஃபிரெஷ் சூப்பர்மார்கெட்டை திறந்துள்ளது. இந்த நிறுவனம் தானியங்கி ஷாப்பிங் கார்ட் டிராலியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-----------------------------------------------
முந்தைய பதிவுகள்

-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 2 February 2018

மிக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஐந்து தொழில்கள்



மிக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஐந்து தொழில்கள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 26 January 2018

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டாப் 10 பொருட்கள்

டந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பத்து பொருட்களின் பட்டியல் காணொளி காட்சி தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி பிடித்திருந்தால் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

(ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)


-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 20 January 2018

தஞ்சை - கைவினை பொருட்கள் கண்காட்சி தொகுப்பு - 2018


ஞ்சாவூரில் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் எடுக்கப்பட்ட காணொளி காட்சி தொகுப்பு


தஞ்சாவூர் - கைவினை பொருட்கள் கண்காட்சி - பாகம் 1 



தஞ்சாவூர் - கைவினை பொருட்கள் கண்காட்சி - பாகம் 2  



தஞ்சாவூர் - கைவினை பொருட்கள் கண்காட்சி - பாகம் 3 

-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 13 January 2018

ஜாக் மா சொல்லும் வெற்றி ரகசியங்கள்



லகம் முழுவதும் கோடிகணக்கான வாடிக்கையாளர்களை பெற்று வெற்றிகரமாக ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா சொல்லும் தொழில் வெற்றி ரகசியங்கள்

1. போட்டியும் வேடிக்கையும்  
வர்த்தகம் செய்வது என்பது போட்டி நிறைந்த உலகில் எதிராளிகளுடன் போராடுவதை போன்றது ஆனால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சண்டையிடுவதை போன்றதல்ல, ஒரு வேளை போட்டியில் எதிராளி மறைந்து போனாலும் நீங்கள் வெற்றி பெற்றதாக சொல்லி விட முடியாது. வெற்றிகரமான வர்த்தகம் என்பது வேடிக்கை நிறைந்த விரும்பி விளையாடும் போட்டியை போன்றது.

2. தோல்வியிலிருந்து கற்று கொள்ளுங்கள்:
வர்த்தகத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் வெற்றி சரித்திரம் சொல்லும் புத்தகங்களை படித்தால் அதில் அவர்கள் வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லபட்டிருக்கும், அது போன்ற புத்தகங்களும் நிறைய கிடைக்கும், ஆனால் தொழிலில் தோல்வி அடைந்த மனிதர்கள் என்ன காரணத்தினால் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்லும் புத்தகங்களை படித்து பாருங்கள், பெரும்பாலும் தொழில் தோல்விக்கு காரணமாக பல பொதுவான  விஷயங்கள் இருக்கும்,  அவற்றை தெரிந்து கொண்டால் அந்த தவறுகளை நீங்கள் செய்யமால் தவிர்த்து வெற்றி பெறலாம்.

3. வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்த பார்வை:
இன்றைக்கு நீங்கள் வெற்றிகரமாக வர்த்தகம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து வர்த்தகத்தில் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்றால் அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நீங்கள்  வர்த்தகம் செய்யும் துறையில் ஏற்பட போகும் மாற்றங்கள், போட்டிகள் குறித்து நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 

4. நீண்ட கால வர்த்தகம் 
ஒரு தொழிலை துவக்கி அதில் உடனே வெற்றி பெற முடியவில்லை என்றால் அது உங்கள் தவறு அல்ல, ஏனென்றால் நற்பெயர் பெற்று வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய நீண்ட காலம் ஆகும்.

5. எங்கே பிரச்சினை, தவறு என்று அறிதல்:
வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டால் எங்கே பிரச்சினை அல்லது தவறு நிகழ்கிறது என்பதை அறியக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்க வேண்டும். 

6. மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும்:
வெற்றிகரமாக வர்த்தகம் செய்வது என்பது பெரும் பணத்தை கொண்டிருப்பதோ, மிக பெரிய தொழிற்சாலையை வைத்திருப்பதோ, மிக பெரிய பொருட்களை தயாரிப்பதோ அல்ல, மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நுகர்வோரின் தேவைகளை அறிந்து அவர்கள் தேவைக்கேற்ப பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். 

7. உங்கள் சமூக பொறுப்பை உணர்ந்திருங்கள்:
வர்த்தகத்தில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைக்கும் போது அதை நான் எனக்கு சொந்தமான பணமாக எண்ணுவதில்லை, அதை சமூகத்தில் வாழும் மக்களுக்கு நன்மை செய்ய எனக்கு கொடுக்கப்பட்ட பணமாகவே பார்க்கிறேன். 

8. வாடிக்கையாளர்கள்
ஒரு வர்த்தகத்தில் வெற்றி பெற நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும், அப்படியில்லையென்றால் அது வெறும் பொருட்களை உற்பத்தி செய்யகூடிய விற்பனை இல்லாத தொழிற்சாலையை நடத்துவதை போன்றதாகவே இருக்கும்.

9. கடின பாதையில்:
வர்த்தகம் செய்வது இன்றைக்கு கடினமாக இருக்கலாம், நாளைக்கு இன்னும் கடினமாக மாறலாம், ஆனால் நாளை மறுநாள் வெற்றி நாளாக இருக்க கூடும், அதனால் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது சிறந்து போய் விடாமல் தொடர்ந்து வெற்றி பெற முயற்சியுங்கள். 

10. குழு ஒற்றுமையும், பங்களிப்பும்:  
அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு கூட்டு முயற்சியே காரணம், குழுவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் பங்களிப்பும் வெற்றிக்கு முக்கியம் அதனால் எல்லோரையும் மதித்து குழுவாக ஒற்றுமையுடன் செயல்படுவது வெற்றிக்கு முக்கியம். 

-----------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 5 January 2018

புதிதாக தொழில் துவங்குபவர்கள் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்



1. சிலர் சொல்வதை நம்பி: 
எங்கோ, யாரோ ஒருவர் ஒரு தொழிலில் கஷ்டப்பட்டு முன்னேறி வெற்றி பெற்றிருப்பார், அவரை பற்றி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களிடம் மிக பெருமையாக சொல்லி அவர் செய்த தொழிலை நீங்களும் செய்தால் லாபம் கொட்டும் என்று கூறினால் உடனே அவர்கள் பேச்சை நம்பி நீங்களும் அந்த தொழிலில் முதலீடு செய்ய துவங்கி விடாதீர்கள். 

2. அனுபவம் வேண்டும்:   
எந்த ஒரு தொழில் துவங்கும் முன்பும் அந்த தொழில் பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா என்று சிந்தியுங்கள், ஒரு வேளை உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டால் தொழில் அனுபவம் உள்ளவர்களை உங்களுடன் கூட்டு சேர்த்து கொள்ளுங்கள். 

3. பொருளின் தரமும், விலையும்:
நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை விற்க விரும்பினால் அதே பொருளை உங்கள் போட்டியாளர் என்ன தரத்தில், என்ன விலைக்கு விற்பனை செய்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பின்னர் போட்டியாளரின் தயாரிப்பை விட உயர்தரத்தில் குறைந்த விலையில் உங்களால் விற்பனைக்கு கொண்டு வர முடியுமா என்று சிந்தித்து பின்பு தொழில் செய்ய தொடங்குங்கள். 

4. விளம்பரம் முக்கியம்:
எவ்வளவு தான் சிறந்த தரத்தில் பொருளை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றாலும் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை என்றால் உங்கள் பொருள் வாடிக்கையாளரை சரியாக சென்றடையவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள், விளம்பரம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிகையை அதிகரியுங்கள். 

5. செலவுகளை திட்டமிடுங்கள்:
தொழில் செய்வதற்கு முன்பு அதற்கான முதலீடு எவ்வளவு தேவைப்படும், அத்தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள். நீங்களே எல்லா வேலைகளையும் செய்ய முடியாவிட்டால் வேலைக்கு எத்தனை பேரை சேர்க்க வேண்டும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் உட்பட எல்லா செலவுகளையும் முன் கூட்டியே திட்டமிடுங்கள். 
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்