Friday 24 November 2017

1 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்க கூடிய டாப் 1௦ சிறு தொழில்கள்



1. சமூக ஊடக விளம்பர உதவி நிறுவனம்:

சமூக ஊடகங்களில் பொருட்களையும் நிறுவனங்ளையும் விளம்பரம் செய்வது இப்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இளைஞர்கள் பெரும்பாலும் இணையத்தில் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதால், அங்கு அவர்களை கவரும் வகையில் பொருட்களை விளம்பரம் செய்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொருட்களை விளம்பரம் செய்ய உதவும் விளம்பர நிறுவனங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.  
   
2. உபயோகிக்கப்பட்ட கார்களை வாங்கி விற்பதன் மூலம் பெரும் லாபம் அடையலாம். 

3. கலை மற்றும் பொழுதுபோக்கு பயிற்சி வகுப்பு மையம்: நடனம், இசை (கிடார், வயலின், ட்ரம்ஸ்) அபாகஸ், சமையல், தையல், கராத்தே, நீச்சல், என்று பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையம் நடத்தலாம். (அந்தந்த துறை நிபுணர்களை பணிக்கு அமர்த்தி கொள்ளலாம்)

4. விளையாட்டு துறையை சேர்ந்தவர் என்றால் விளையாட்டு பயிற்சி மையம் (கிரிக்கெட், புட்பால், ஹாக்கி, டென்னிஸ்) துவக்கலாம். 

5. கொரியர் நிறுவனம் துவக்கலாம். 



6. வீடு அல்லது அலுவலகம் மாறும் போது பொருட்களை இடம் மாற்றும் நிறுவனம். (பேக்கர்ஸ் & மூவர்ஸ்) 

7. உணவு பொருட்கள் விநியோக நிறுவனம் (வீட்டுக்கு, அலுவலகங்களுக்கு ஆர்டர் பெற்று உணவை கொண்டு சென்று விநியோகம் செய்யும் தொழில்)

8. வீட்டு உபயோக பொருட்களை பழுது பார்க்கும் நிறுவனம். வீடுகளுக்கு நேரடியாக சென்று பழுதான பொருட்களை ரிப்பேர் செய்யும் நிறுவனம். (சர்விஸ் டெக்னிசியன்களை பணிக்கு அமர்த்தி கொள்ளலாம்)  

9. உணவு கட்டுப்பாடு ஆலோசனை மையம் நடத்தலாம். (உணவு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் இக்காலத்தில் இந்த நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது - இந்த துறையில் அனுபவமுள்ள உணவு கட்டுப்பாடு ஆலோசகரை பணிக்கு அமர்த்தி கொள்ளலாம்)   

10. வாகனங்களை வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து தரும் ஆட்டோ மாடிபிகேஷன் நிறுவனம்.

--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 17 November 2017

சிறு வணிகம் - ஸ்டீல் ஸ்க்ராப் தொழில்

சுயமாக தொழில் துவங்கி, வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய காணொளி காட்சி இது.



ஆங்கிலத்தில் ஸ்க்ராப் என்று அழைக்கப்படும் இரும்பு கழிவுகளில் இருந்து ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்க வழி சொல்லும் அருமையான காணொளி காட்சி இது, தொழிற்சாலைகளில் இருந்து தேவையற்றது என்று வெட்டி ஒதுக்கப்படும் இரும்பை குறைந்த விலைக்கு வாங்கி அதை தேவைபடுவோர்க்கு அவர்களுக்கு தேவைப்படும் அளவுகளில் வெட்டி கொடுத்து நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும். இந்த ஸ்டீல் ஸ்க்ராப் விற்று வாழ்கையில் முன்னேறியவர் தரும் அனுபவ ஆலோசனை... 

Friday 10 November 2017

சிகரம் தொட்ட மனிதர்கள் - சுந்தர் பிச்சை



கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். அவரது வாழ்கையின் வெற்றி சரித்திரத்தை சிறு குறிப்புகளாக: 



* சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் 12 ஜூலை 1972ஆம் ஆண்டு பிறந்தார்.

* அவரது தாய் லக்ஷ்மி ஒரு ஸ்டீனோகிராஃபர், அவரது தந்தை ரெகுனாத பிச்சை சென்னையில், ஜி.இ.சி, நிறுவனத்தில் ஒரு மின்சார பொறியாளராக பணியாற்றி வந்தார். 

* சென்னையில் இரு அறைகளை உள்ள வீட்டில் வசித்து வந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் டிவி, கார் போன்ற வசதிகள் எதுவும் இருக்கவில்லை.

* சுந்தர் சென்னையில் அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தார். 

* சென்னை ஐ ஐ டியில் உள்ள வனவாணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தார். 

* பள்ளி பருவத்திலேயே தொலைபேசி எண்களை ஞாபகத்தில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

* படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சுந்தர் சிறந்து விளங்கினார். பள்ளி கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய இவர், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகள் பலவற்றில் தன் பள்ளி அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

* சுந்தர் பிச்சை பள்ளிப்படிப்பை முடித்த பின்பு காரக்பூரில் இருக்கும் ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை படித்து முடித்தார்.

* அதன் பின் உதவித் தொகையுடன் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.

* 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை அதன் மென்பொருள் தயாரிப்பு பிரிவில் தன் பணியை தொடங்கினார். அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின்  க்ரோம் ப்ரவுசர் , ஆண்ட்ராய்ட் - மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்  ஆகியவை உருவாக்கப்பட்டன. 

* 2013 ஆம் ஆண்டு கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவின் தலைவரானார்.

* கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான லாரி பேஜ், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தை நிர்வகிக்க சென்று விட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமிக்கபட்டார்.

* கடந்த 2016ஆம் ஆண்டில் இவரது சம்பளம் ரூ.1,285 கோடி (20 கோடி டாலர்) என்றும், சம்பளத்தை தவிர இவருக்கு இவர் பதவி வகிக்கும் நிறுவனத்தின் பங்குகளிலும் கணிசமான பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 3 November 2017

சிறந்த தொழிலதிபர்கள் சொல்லும் - தொழில் வெற்றியின் ரகசியம்



அனுபவங்கள் உங்களை மிக சிறந்தவராக மாற்றும். தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளுங்கள் -  ராபர்ட் கியோசாகி - அமெரிக்க தொழிலதிபர் - ரிச் டாட், புவர் டாட் - புத்தக எழுத்தாளர்

நீங்கள் செய்யும் தொழில் எதுவானாலும் அதை விரும்பி செய்யுங்கள், தோல்வியடைய விருப்பமில்லையென்றால் புதுமையாக எதுவும் படைக்க இயலாது. - எலன் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்) 

தோல்விகள் பின்னடைவுகளை உந்துதலாக எடுத்து கொண்டு வெற்றி இலக்கை தெளிவாக நிர்ணயித்து கொண்டு அதை நோக்கி முன்னேறுங்கள்.  ஷஷான்க் - நிறுவனர் - ப்ராக்டோ ஹெல்த் ஆப்

பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக உங்களுக்கு தெரியாத தொழில் இறங்காதீர்கள். பெரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேடுங்கள் - லாரி பேஜ் - குகுள் நிறுவனர் 

வெற்றியின் மீது எப்போதும் ஆவல் கொண்டிருங்கள், எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள் - முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் 

புறக்கணிப்பை பயன்படுத்துங்கள், உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள், குறை காணாதீர்கள் அதிலுள்ள வாய்ப்புகளை பாருங்கள்
- ஜாக் மா - அலிபாபா நிறுவனர் 

நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள், உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள், மூளையை அல்ல - ஜெப் பெசாஸ் - அமேசான் நிறுவனர்  

உங்களுக்கு அனுபவமுள்ள தொழிலை மட்டுமே செய்ய முயற்சியுங்கள், உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரைகள் கேளுங்கள், உங்கள் உறவினரிடமோ, நண்பரிடமோ அல்ல - ஆலன் சுகர் - தொழிலதிபர் 

சரியான் வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால் சாதாரண மனிதர்களால் கூட பல பெரிய வெற்றிகளை பெற முடியும். பொறமை கொண்ட போட்டியாளர்களின் தவறான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுங்கள் -  சாம் வால்டன் - வால்மார்ட் நிறுவனர் 

--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்