Thursday, 14 December 2017

ரத்தன் டாடா சொல்லும் வெற்றிக்கு ஏழு விதிகள்

த்தன் டாடா, உலக அளவில் புகழ்பெற்ற டாடா குழுமங்களின் தலைவர், பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், சிறந்த நிர்வாகி என்று  ரத்தன் டாடாவின் புகழை சொல்லி கொண்டே போகலாம். தொழில் துறையின் வருங்காலம் குறித்த அவரது பார்வை, யோசனைகள், தொழில் திறன்கள், வர்த்தக உத்திகள் புகழ் பெற்றவை. அவரது ஊக்கம் தரும் பேச்சுக்களை கேட்கும் போது மனதில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தோன்றுவது நிச்சயம், பல்வேறு நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா அவர்கள் ஆற்றிய உரையின் சிறு தொகுப்பு ரத்தன் டாடா சொல்லும் வெற்றிக்கு ஏழு விதிகள் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1. சிறந்த விஷயங்களை கேட்பதையும், கற்று கொள்வதையும் ஒருபோதும் நிறுத்தாதீர்கள், படிப்பு என்பது கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வருவதோடு நின்று விடக்கூடாது. 

2. பெரு நிறுவனங்கள் தொழிலில் வெற்றி பெற காரணம் அதன் ஊழியர்கள் ஒற்றுமையுடன் குழுவாக சேர்ந்து உழைப்பது தான், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தளர்ந்து போகாமல் ஒற்றுமையுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்.

3. ஒரு நிறுவனம் வளர்ச்சியடைய துவங்கும்போது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர் தனிபட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரும்,  தொழிலில் சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையும் வரும் அப்போது அந்த நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானது தான் என்று முதலாவது உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளால் வரும் விளைவுகளை குறித்து யோசித்து சரியான முடிவை எடுக்க வேண்டும், ஒரு வேளை நீங்கள் எடுக்கும் முடிவு தவறாகி விட்டால் அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கலாம். 

4. மிக பெரிய வெற்றிகளை குவித்த மிக பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆரம்பத்தில் சிறிய நிலையில் தான் துவங்கப்பட்டன, எப்படி கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் உருவாகின,  தனிப்பட்ட மனிதர்கள் மனதில் தோன்றிய ஒரு சிறந்த ஐடியா தான்  பின்நாட்களில் மிக பெரிய வெற்றிகளை குவிக்க விதையாய் இருக்கிறது. இது ஆப்பிள் முதல் அமேசான் வரை எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

5. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மீது வைக்கும் நம்பிக்கை தான் ஒரு நிறுவனத்தின் அஸ்திவாரம். நீங்கள் செய்யும் வியாபாரத்தை உங்கள் வாடிக்கையாளர்கள்  எப்படி பார்க்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மீது வைக்கும் நம்பிக்கை தான் நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க வைக்கும்.  



6. உங்களை நீங்கள் நம்புங்கள்: சிலர் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலே எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஏனோதானோவென்று வாழ்வில் எந்த குறிக்கோளும் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருப்பார்கள், அவர்களோடு நீங்கள் இணைந்தால் உங்கள் நேரமும் வீணாகும். ஆகவே நீங்கள் என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்பதை தெரிந்து செய்யுங்கள்.

7. உங்களுக்கு கிடைத்த நல்ல கல்வியால் நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கலாம், நீங்கள் பெற்ற நன்மைகளில் சிலவற்றையாவது நாட்டுக்கும், சமூகத்துக்கும் நீங்கள் திரும்ப தர வேண்டும். நான் பெற்ற கல்வியால் நான் உயர்ந்த நிலைக்கு சென்றால் போதும் என்று திருப்தியடைந்து விடக்கூடாது, உங்களால் இந்த சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடிந்தது என்று எண்ணி பாருங்கள். 

டாடா நிறுவனத்தை பற்றி நீங்கள் அறியாத பத்து உண்மைகள்