உலகம் முழுவதும் கோடிகணக்கான வாடிக்கையாளர்களை பெற்று வெற்றிகரமாக ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா சொல்லும் தொழில் வெற்றி ரகசியங்கள்
1. போட்டியும் வேடிக்கையும்
வர்த்தகம் செய்வது என்பது போட்டி நிறைந்த உலகில் எதிராளிகளுடன் போராடுவதை போன்றது ஆனால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சண்டையிடுவதை போன்றதல்ல, ஒரு வேளை போட்டியில் எதிராளி மறைந்து போனாலும் நீங்கள் வெற்றி பெற்றதாக சொல்லி விட முடியாது. வெற்றிகரமான வர்த்தகம் என்பது வேடிக்கை நிறைந்த விரும்பி விளையாடும் போட்டியை போன்றது.
2. தோல்வியிலிருந்து கற்று கொள்ளுங்கள்:
வர்த்தகத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் வெற்றி சரித்திரம் சொல்லும் புத்தகங்களை படித்தால் அதில் அவர்கள் வெற்றி பெற்றதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லபட்டிருக்கும், அது போன்ற புத்தகங்களும் நிறைய கிடைக்கும், ஆனால் தொழிலில் தோல்வி அடைந்த மனிதர்கள் என்ன காரணத்தினால் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்லும் புத்தகங்களை படித்து பாருங்கள், பெரும்பாலும் தொழில் தோல்விக்கு காரணமாக பல பொதுவான விஷயங்கள் இருக்கும், அவற்றை தெரிந்து கொண்டால் அந்த தவறுகளை நீங்கள் செய்யமால் தவிர்த்து வெற்றி பெறலாம்.
3. வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்த பார்வை:
இன்றைக்கு நீங்கள் வெற்றிகரமாக வர்த்தகம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து வர்த்தகத்தில் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்றால் அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் நீங்கள் வர்த்தகம் செய்யும் துறையில் ஏற்பட போகும் மாற்றங்கள், போட்டிகள் குறித்து நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
4. நீண்ட கால வர்த்தகம்
ஒரு தொழிலை துவக்கி அதில் உடனே வெற்றி பெற முடியவில்லை என்றால் அது உங்கள் தவறு அல்ல, ஏனென்றால் நற்பெயர் பெற்று வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய நீண்ட காலம் ஆகும்.
5. எங்கே பிரச்சினை, தவறு என்று அறிதல்:
வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டால் எங்கே பிரச்சினை அல்லது தவறு நிகழ்கிறது என்பதை அறியக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்க வேண்டும்.
6. மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும்:
வெற்றிகரமாக வர்த்தகம் செய்வது என்பது பெரும் பணத்தை கொண்டிருப்பதோ, மிக பெரிய தொழிற்சாலையை வைத்திருப்பதோ, மிக பெரிய பொருட்களை தயாரிப்பதோ அல்ல, மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நுகர்வோரின் தேவைகளை அறிந்து அவர்கள் தேவைக்கேற்ப பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்.
7. உங்கள் சமூக பொறுப்பை உணர்ந்திருங்கள்:
வர்த்தகத்தில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைக்கும் போது அதை நான் எனக்கு சொந்தமான பணமாக எண்ணுவதில்லை, அதை சமூகத்தில் வாழும் மக்களுக்கு நன்மை செய்ய எனக்கு கொடுக்கப்பட்ட பணமாகவே பார்க்கிறேன்.
8. வாடிக்கையாளர்கள்
ஒரு வர்த்தகத்தில் வெற்றி பெற நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும், அப்படியில்லையென்றால் அது வெறும் பொருட்களை உற்பத்தி செய்யகூடிய விற்பனை இல்லாத தொழிற்சாலையை நடத்துவதை போன்றதாகவே இருக்கும்.
9. கடின பாதையில்:
வர்த்தகம் செய்வது இன்றைக்கு கடினமாக இருக்கலாம், நாளைக்கு இன்னும் கடினமாக மாறலாம், ஆனால் நாளை மறுநாள் வெற்றி நாளாக இருக்க கூடும், அதனால் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும் போது சிறந்து போய் விடாமல் தொடர்ந்து வெற்றி பெற முயற்சியுங்கள்.
10. குழு ஒற்றுமையும், பங்களிப்பும்:
அலிபாபா நிறுவனத்தின் வெற்றிக்கு கூட்டு முயற்சியே காரணம், குழுவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் பங்களிப்பும் வெற்றிக்கு முக்கியம் அதனால் எல்லோரையும் மதித்து குழுவாக ஒற்றுமையுடன் செயல்படுவது வெற்றிக்கு முக்கியம்.