Friday 5 January 2018

புதிதாக தொழில் துவங்குபவர்கள் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்



1. சிலர் சொல்வதை நம்பி: 
எங்கோ, யாரோ ஒருவர் ஒரு தொழிலில் கஷ்டப்பட்டு முன்னேறி வெற்றி பெற்றிருப்பார், அவரை பற்றி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களிடம் மிக பெருமையாக சொல்லி அவர் செய்த தொழிலை நீங்களும் செய்தால் லாபம் கொட்டும் என்று கூறினால் உடனே அவர்கள் பேச்சை நம்பி நீங்களும் அந்த தொழிலில் முதலீடு செய்ய துவங்கி விடாதீர்கள். 

2. அனுபவம் வேண்டும்:   
எந்த ஒரு தொழில் துவங்கும் முன்பும் அந்த தொழில் பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா என்று சிந்தியுங்கள், ஒரு வேளை உங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டால் தொழில் அனுபவம் உள்ளவர்களை உங்களுடன் கூட்டு சேர்த்து கொள்ளுங்கள். 

3. பொருளின் தரமும், விலையும்:
நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து அதை விற்க விரும்பினால் அதே பொருளை உங்கள் போட்டியாளர் என்ன தரத்தில், என்ன விலைக்கு விற்பனை செய்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பின்னர் போட்டியாளரின் தயாரிப்பை விட உயர்தரத்தில் குறைந்த விலையில் உங்களால் விற்பனைக்கு கொண்டு வர முடியுமா என்று சிந்தித்து பின்பு தொழில் செய்ய தொடங்குங்கள். 

4. விளம்பரம் முக்கியம்:
எவ்வளவு தான் சிறந்த தரத்தில் பொருளை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றாலும் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை என்றால் உங்கள் பொருள் வாடிக்கையாளரை சரியாக சென்றடையவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள், விளம்பரம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிகையை அதிகரியுங்கள். 

5. செலவுகளை திட்டமிடுங்கள்:
தொழில் செய்வதற்கு முன்பு அதற்கான முதலீடு எவ்வளவு தேவைப்படும், அத்தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள். நீங்களே எல்லா வேலைகளையும் செய்ய முடியாவிட்டால் வேலைக்கு எத்தனை பேரை சேர்க்க வேண்டும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் உட்பட எல்லா செலவுகளையும் முன் கூட்டியே திட்டமிடுங்கள். 
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்