Friday 8 December 2017

சிறு தொழில்: பாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு

ன்றைய பாஸ்ட் புட் யுகத்தில் எல்லாமே வேகமாக மாறி கொண்டே இருக்கிறது, சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் தட்டுக்களில் அல்லது பாலிதீன் பேப்பர் மீது வைத்து சாப்பிடும்போது, சூடு காரணமாக ஏற்படும் ரசாயன மாற்றங்களால் நாம் உண்ணும் உணவே நம்மை மெல்ல கொல்லும் விஷமாக மாறி விடுகிறது. இந்நாட்களில் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், கவர்கள் உபயோகம் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் பாக்கு மட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பாக்கு மட்டை தட்டுகள் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. பாக்கு மட்டை தட்டுகளில் சூடான உணவுகளை வைத்து சாப்பிட்டாலும், உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் எவ்வித ரசாயன மாற்றங்களும் ஏற்படுவதில்லை. பாக்கு மட்டை தட்டுகள், கப்புகள், சாப்பிட பயன்படுத்தி முடித்தவுடன் மண்ணில் தூக்கி எறிந்தாலும் மண்ணிலேயே மக்கி போய் விடுவதால் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. பாக்கு மட்டை தட்டுகள், கப்புகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியவுடன் அதற்கான தேவையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

சிறு முதலீடு மட்டுமே தேவைப்படும் பாக்கு மட்டை தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். 

முதல் தரமான பாக்கு மட்டைகளை தேர்வு செய்து வாங்கி கொள்ளுங்கள் (சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளில் தரமான பாக்குமட்டைகள் கிடைக்கும்) 

பச்சை மட்டைகளை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்கவும்.

நன்கு காய்ந்த மட்டைகளை நல்ல தண்ணீர் ஊற்றி தூசுகள், அழுக்குகள் நீங்க கழுவவும், மீண்டும் பத்து நிமிடங்கள் வரை ஈரம் போக காய வைக்கவும்.

காய வைக்கப்பட்ட மட்டைகளை பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரத்தில் கொடுத்து  விரும்பிய வடிவங்களில் பாக்குமட்டை தட்டுகள், கப்புகள் தயாரிக்கலாம். 

பாக்கு மட்டை தொழில் குறித்து விளக்குகிறார் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் சிறு தொழிலதிபர் 

--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்