Friday 10 November 2017

சிகரம் தொட்ட மனிதர்கள் - சுந்தர் பிச்சை



கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். அவரது வாழ்கையின் வெற்றி சரித்திரத்தை சிறு குறிப்புகளாக: 



* சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் 12 ஜூலை 1972ஆம் ஆண்டு பிறந்தார்.

* அவரது தாய் லக்ஷ்மி ஒரு ஸ்டீனோகிராஃபர், அவரது தந்தை ரெகுனாத பிச்சை சென்னையில், ஜி.இ.சி, நிறுவனத்தில் ஒரு மின்சார பொறியாளராக பணியாற்றி வந்தார். 

* சென்னையில் இரு அறைகளை உள்ள வீட்டில் வசித்து வந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் டிவி, கார் போன்ற வசதிகள் எதுவும் இருக்கவில்லை.

* சுந்தர் சென்னையில் அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தார். 

* சென்னை ஐ ஐ டியில் உள்ள வனவாணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தார். 

* பள்ளி பருவத்திலேயே தொலைபேசி எண்களை ஞாபகத்தில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

* படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சுந்தர் சிறந்து விளங்கினார். பள்ளி கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய இவர், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகள் பலவற்றில் தன் பள்ளி அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

* சுந்தர் பிச்சை பள்ளிப்படிப்பை முடித்த பின்பு காரக்பூரில் இருக்கும் ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை படித்து முடித்தார்.

* அதன் பின் உதவித் தொகையுடன் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.

* 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை அதன் மென்பொருள் தயாரிப்பு பிரிவில் தன் பணியை தொடங்கினார். அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின்  க்ரோம் ப்ரவுசர் , ஆண்ட்ராய்ட் - மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்  ஆகியவை உருவாக்கப்பட்டன. 

* 2013 ஆம் ஆண்டு கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவின் தலைவரானார்.

* கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான லாரி பேஜ், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தை நிர்வகிக்க சென்று விட்டதால் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர்பிச்சை நியமிக்கபட்டார்.

* கடந்த 2016ஆம் ஆண்டில் இவரது சம்பளம் ரூ.1,285 கோடி (20 கோடி டாலர்) என்றும், சம்பளத்தை தவிர இவருக்கு இவர் பதவி வகிக்கும் நிறுவனத்தின் பங்குகளிலும் கணிசமான பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்